யூனிட்டுக்கு 8.25 ரூபாய் உயர்வு- மின்சார கட்டண பட்டியல் வெளியானது!

 
மின் இணைப்பு மின் இணைப்பு

புதுச்சேரியில் 2025-2030ம் நிதியாண்டு வரை யூனிட்டுக்கு 8.25 ரூபாய் உயர்கிறது. மின்சார கட்டண உயர்வு பட்டியல் வெளியானது.

puducherry

புதுச்சேரி புதுச் சேரியில் வீட்டு உபயோக மின்சார கட்டணத்தை 2024-2025ம் நிதி ஆண்டு முதல் 2029-2030ம் நிதி ஆண்டு வரை ரூ. 8.25 வரை கட்டணத்தை உயர்த்த, கோவாவில் உள்ள இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் புதுச்சேரி மின்துறை மனு தாக்கல் செய்தது. தற்போது இந்த கட்டண உயர்வுக்கு இணை ஆணையம் ஒப்புதல் அளித்து திருத் தப்பட்ட கட்டண உயர்வு பட்டியலை வெளியிட்டது. இந்த புதிய கட்டண உயர்வானது. அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரு வதாக தெரிவிக்கப்பட்டது. பிறகு பல்வேறு அரசியில் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் அக்டோபர் மாதம் கட்டண உயர்வை வசூலிக்க முடியாமல் போனது, தற்போது மீண்டும் உயர்த்தப் பட்ட அந்த கட்டணத்தை அக். 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என கண்காணிப்பு பொறியாளர் தெரிவித்துள்ளார்.

2024-2025ம் ஆண்டு 0-100 யூனிட் வரை ரூ.2.70 ஆக இருந்த கட்டணம் ரூ.2.90 ஆக உயர்த்தப்படுகிறது. இதே போல் 101-200 யூனிட் வரை ரூ.4ல் இருந்து ரூ.4.20 ஆகவும். 201-300 யூனிட் வரை ரூ.6ல் இருந்து ரூ.6.20 ஆகவும், 301-400 யூனிட் வரை ரூ.7.50ல் இருந்து ரூ.7.70 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட் டுள்ளது. அதிக பட்சமாக 2030ம் ஆண்டு ரூ.8.25 வரை உயர்த்த இணை ஆணையத்திடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளன. இதற்கான அறிவிப்பை கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன் வெளியிட்டுள்ளார். இது பற்றி விசாரித்த போது, புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்கிறது. மக்களிடம் கருத்து கேட்பார்கள். ஆனால் இந்த முறை ஐந்தாண்டுகளுக்கு மின் கட்டண உயர்வு பட்டியல் வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.