ஞாயிறு அட்டவணைப்படி நாளை மின்சார ரயில்கள் இயக்கப்படும்
தமிழ்நாடு முழுவதும் நாளை ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

வீடுகள், தனியார் நிறுவனங்களில், விவசாய கருவிகள், வாகனங்களுக்கு பூஜை செய்து மக்கள் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆயுதபூஜையை முன்னிட்டு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆயுத பூஜையை ஒட்டி நாளை (அக்.11) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் புறநகர் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


