ரயில் பயணிகளின் கவனத்திற்கு! ஜன. 1 முதல் மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்
சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்ட்ரல் - அரக்கோணம் தடம் உள்பட 3 வழித்தடங்களில் 9 மின்சார ரயில்களின் நேரம் ஜன.1-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளது.

திருத்தணி- சென்னை சென்ட்ரலுக்கு புறப்படும் ரயில், அரக்கோணத்தில் காலை 5.50 மணிக்கு பதிலாக, அதிகாலை 5.55 மணிக்கு அடையும். அரக்கோணம் - சென்னை சென்ட்ரலுக்கு புறப்படவேண்டிய மின்சார ரயில், காலை 10 மணிக்கு பதிலாக காலை 9.50 மணிக்கு புறப்படும். திருத்தணி - சென்னை சென்ட்ரலுக்கு புறப்படும் ரயில், பிற்பகல் 2.40 மணிக்கு பதிலாக பிற்பகல் 2.55 மணிக்கு அடையும். சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 8.05 மணிக்கு புறப்படும். சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரலுக்கு இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 9.05 மணிக்கு புறப்படும்.
கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரலுக்கு இரவு 9.25 பதிலாக இரவு 9.4 மணிக்கு புறப்படும். செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு மாலை 6 மணிக்கு பதிலாக மாலை 6.05 மணிக்கு புறப்படும். செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு மாலை 6.40 மணிக்கு பதிலாக, மாலை 6.30 மணிக்கு புறப்படும். செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு இரவு 10.10 மணிக்கு பதிலாக, இரவு 10.20 மணிக்கு புறப்படும்.இத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


