சென்னையில் நாளை மின்சார ரயில்கள் ரத்து

 
train

நாளை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

train

சென்னையில் பொது மக்களின் வசதிக்காக சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் அலுவலகத்திற்கு செல்வோர், கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட சில காரணங்களுக்காக அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 3 மணி வரை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார நாட்கள் என்பதால் வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.