மின்சார ரயிலை நம்பி வெளியே செல்லாதீர்கள்! சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு

 
train

இரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று (மார்ச் 09) காலை முதல் மாலை வரை புறநகர் இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நேரத்தில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

chennai bus

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையேயான 4வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் வரும் இன்று 9-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை -கடற்கரை மற்றும் எழும்பூர் இடையேயான 4-வது ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக,  இன்று அதிகாலை 5:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை கடற்கரை - எழும்பூர் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் தாம்பரம் - கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் சென்னை கடற்கரை செங்கல்பட்டு/ காஞ்சிபுரம்/ திருமால்பூர்/ அரக்கோணம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 05:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை பகுதியளவு ரத்து செய்யப்படுகின்றன.  மாலை 4:10 மணி முதல் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும்.


இந்நிலையில் இரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று (மார்ச் 09) காலை முதல் மாலை வரை புறநகர் இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நேரத்தில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோல் கிளாம்பாக்கம் - பிராட்வே 20 பேருந்துகள், தாம்பரம் - பிராட்வே 25 பேருந்துகள், பல்லாவரம் - செங்கல்பட்டு 5 பேருந்துகள் என 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.