சென்னை பீச் - செங்கல்பட்டு மார்க்கத்தில் ஏசி வசதியுடன் மின்சார ரயில்!

 
ச் ச்

சென்னை பீச் - செங்கல்பட்டு மார்க்கத்தில் ஏசி வசதியுடன் மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது.

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவில் ஏசி வசதியுடன் கூடிய மின்சார ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. ஏசி மின்சார ரயில்களுக்கான பெட்டிகள் பெரம்பூர் ஐசிஎப்- எல் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க இந்தியா தொழில்நுட்பத்தில் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலாலான 12 பெட்டிகளை கொண்டதாக ஏசி மின்சார ரயில் உள்ளது. அந்த பெட்டிகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு பெட்டியிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அவசர உதவி என்றால் லோகோ பைலட்டுடன் தொடர்பு கொள்ள டாக் பேக் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் அதிகப்பட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வல்ல இந்த ரயிலில், சுமார் 1200 அமர்ந்தும், 3798 பயணிகள் நின்றும் பயணிக்கலாம்.

தானியங்கி கதவை கொண்ட இந்த ஏசி மின்சார ரயிலில், எலக்ட்ரோ நிமட்டிக் பிரேக் சிஸ்டன் இருப்பதால், 35 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கலாம். ஏசி மின்சார ரயிலுக்கான கால அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.