மின்சார ரயில் சேவை பாதிப்பு - பயணிகள் அவதி
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை கடற்கரை - பூங்கா ரயில் நிலையம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பணி முடிந்து வீடுகளுக்குச் செல்வோர் அவதிக்குள்ளாகியுள்ளனர். ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள், நிலைய அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் இயங்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையேயான வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. கடற்கரைக்கு பதிலாக பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்கா ரயில் நிலையம் அல்லது எழும்பூர் ரயில் நிலையம் செல்லுமாறு பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

