தேர்தல் பணிக்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு! ஈரோட்டில் பரபரப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் தேர்தல் பணிக்காக வந்திருந்த நெடுஞ்சாலை துறை அலுவலக உதவியாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெடுஞ்சாலை துறை பிரிவில் அலுவலக உதவியாளராக பணியாற்றும் சந்திரமோகன், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பணிக்காக வந்திருந்தார். காரில் இருந்து இறங்கி மாநகராட்சி அலுவலகத்திற்குள் செல்ல முயன்ற போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை துறையில் ஓய்வு பெற்று அதன் பின் அவுட் சோர்சிங் மூலம் அதே துறையில் அலுவலக உதவியாளராக சந்திரமோகன் பணியாற்றி வந்த நிலையில், தேர்தல் பணிக்காக மாநகராட்சி அலுவலகம் வந்த போது மயங்கி விழுந்தார்..