#ELECTION UPDATE: கொல்கத்தாவில் 60 நாட்களுக்கு 144 தடை - நாளை முதல் அமல்..!
May 2, 2026, 17:24 IST1777722891061
மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு 2011ஆம் ஆண்டில் இருந்து ஆட்சியில் உள்ளது. 2011, 2016, 2021 என தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கிறார். இந்த முறை பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி இருப்பதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ல் நடக்க உள்ள நிலையில், கொல்கத்தாவில் நாளை (மே 3) முதல் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நாளில் வன்முறை நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் மே 3 முதல் ஜூலை 1 வரை மக்கள் கூட்டமாக கூடவும், போராட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

