தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது.. இது எங்களுக்கு வெற்றிதான் - மனோஜ் பாண்டியன்..

 
தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது.. இது எங்களுக்கு வெற்றிதான் - மனோஜ் பாண்டியன்..

பொதுச்செயலாளார் தேர்தலுக்கான முடிவை அறிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்திருப்பது மிகப்பெரிய வெற்றியாக கருதுவதாக  ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
 
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து  ஓபிஎஸ் தரப்பில் 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை இன்று அவசர வழக்காக  சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார்.  அப்போது ஒபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுக தரப்பில் பரபரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  இதையடுத்து, பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த பிரதான வழக்கின் விசாரணை வரும் மார்ச் 22 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு,   24 ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், அதிமுக பொதுச்செயலளார் தேர்தலை நடத்திக்கொள்ளலாம், ஆனால் தேர்தல் முடிவை வெளியிடக் கூடாது  என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் தரப்பை உள்ளடக்கி மீண்டும் பொதுக்குழு கூட்டுக - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..
 
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த  ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், “தேர்தலுக்கான முடிவை அறிவிக்கக் கூடாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். மனுவினை முழுமையாக விசாரித்து தீர்ப்பினை அறிவிப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து நாங்கள் குரல் எழுப்பியிருக்கிறோம். இதை ஆராய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனை ஆராயும் வரை தேர்தலுக்கான முடிவை அறிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்து இருப்பது கண்டிப்பாக எங்களுக்கான மிகப்பெரிய வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். நியாயம், தர்மம் எங்கள் பக்கம் உள்ளது.

தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது.. இது எங்களுக்கு வெற்றிதான் - மனோஜ் பாண்டியன்..

எங்களை நீக்குவதற்கு இபிஎஸ் யார்? கூவத்தூரில் இருந்த ஒரு கும்பல் எங்களை நீக்கினால் அந்த நீக்கம் செல்லுமா? ஆகவேதான் நீதிமன்றத்தை நாடி எங்கள் உரிமையை பாதுகாத்துக் கொண்டு இருக்கிறோம். வாக்காளர் பட்டியலே இல்லை. இப்போது நடப்பது தேர்தலா? அல்லது ஓபிஎஸ் சொன்னது போல பிக் பாக்கெட்டா என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். தேர்தல் வைத்தால் நானும்(ஓபிஎஸ்) இபிஎஸ் உடன் போட்டியிட தயார் என்று என்றைக்கோ சொல்லி விட்டார். இதுவரை அதற்கான பதில் இல்லை. நியாயம் தர்மம் வெல்லும் வரை எங்கள் சட்ட போராட்டம் தொடரும். ” என்று தெரிவித்தார்.