அமைச்சர் எ. வ. வேலு வாகனத்தை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை..!
Mar 22, 2024, 11:21 IST1711086692285

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள வரை, உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்லவதை தடுக்க, சோதனை சாவடிகள், பறக்கும் படை குழுவினர், நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு வாகனம் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடாம்பூண்டி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை இன்று காலை வாகனத்தை சோதனை செய்தனர்