ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யக் கூடாது! மீறினால் வழக்குப்பதிவு- தேர்தல் ஆணையம்

 
ழ்ச்

திமுகவினர் கொடுக்கும் ரூ.8000 கூப்பன் தவறாக வழிநடத்தக் கூடியது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் திமுகவினர் ₹8000 கூப்பன் என கூறி டம்மியான பேப்பர் கூப்பனை கொடுத்து வருகின்றனர். ஏமாற்றி ஓட்டு வாங்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது குறித்து தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அதில், "மேற்கூறிய சான்றிதழ் மின்னணு ஊடகங்களில் (Electronic media) உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்காக மட்டுமே வழங்கப்பட்டது என இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இச்சான்றிதழ் அச்சிடப்பட்ட பிரசுரப் பொருட்கள், குறிப்பாக துண்டுப் பிரசுரங்கள் (pamphlets) அல்லது கைப்பிரதிகள் (handbills) ஆகியவற்றிற்கு பொருந்தாது.

அத்தகைய அச்சிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 இன் பிரிவு 127A மற்றும் நடைமுறையில் உள்ள மாதிரி நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) ஆகியவற்றைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, மேற்கண்ட வகையில் வெளியிடப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானதும் தவறாக வழிநடத்தக் கூடியதுமானதாகும்.அச்சடிக்கப்படும் எந்தவித கூப்பன் மாதிரிகள், துன்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது. தேர்தல் நடத்தி விதிமுறைகளை மீறி செய்யப்படுமானால் வழக்கு பதிவு செய்யப்படும்" எனக் கூறியுள்ளார்.