சட்டமன்ற தேர்தல் - வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

 
election commision

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் தொடர்பான பணிகள் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்தால் ஊழலாக கருதப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 40 இலட்சம் வரை செலவு செய்யலாம். அதுதான் தேர்தல் ஆணையம் வைத்திருக்கும் உச்ச வரம்பு. அதற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாகச் செலவழித்தாலும் அதனை ஊழல் என்கிறது தேர்தல் ஆணையம். அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.