"வாக்களிப்பதை வீடியோ பதிவு செய்து வெளியிட்டால் 2 ஆண்டுகள் சிறை" - தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை
யாருக்கு வாக்களித்தோம் என்பதை பொதுவெளியில் தெரிவிப்பது தண்டனைக்கு உரிய குற்றம் என தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பொதுவெளியில் தெரிவிப்பது தண்டனைக்கு உரிய குற்றம் என தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எந்த கட்சிக்கு வாக்களித்தேன் என்பதை வெளிப்படுத்தினால் 3 மாதம் சிறை என்றும் கூறியுள்ளது. மேலும் வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே வாக்குபதிவு இயந்திரத்தில் வாக்கை பதிவு செய்வதை வீடியோவாக பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றம், வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பது குற்றமாகும். அப்படி வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாக்களிக்கும் வீடியோவை வெளியிடும் சமூக வலைதள பக்கமும் உடனடியாக முடக்கப்படும். வாக்களிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட தவெகவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

