234 தொகுதிகள், 75,032 வாக்குச்சாவடிகள்! சுமார் 5.67 கோடி வாக்காளர்கள்- தேர்தல் ஆணையர்

 
s

5 மாநிலங்களில்  17.4 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.


டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்ததின்போது நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.  தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குபவை. கலாச்சாரம் மட்டுமின்றி ஜனநாயகத்திலும் 5 மாநிலங்களும் சிறந்து விளங்குகின்றன. தேர்தல் தேதி தொடர்பாக அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம்.

தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களிலும் 824 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.  5 மாநிலங்களில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். 5 மாநிலங்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 5 மாநில தேர்தல் பணிகளில் 25 லட்சம் அலுவலர்கள் ஈடுபடவுள்ளனர். தமிழ்நாட்டில் முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். தகுதியான ஒரு வாக்காளர் கூட விடுபடக்கூடாது என்ற நோக்கில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது. தமிழ்நாட்டில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் மொத்தம் 75,032 வாக்குச்சாவடிகள் உள்ளன. நகர்புறங்களில் 30,967 வாக்குச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 44,065 வாக்குச்சாவடிகளும் உள்ளன.தேர்தல் பணிக்காக 1,444 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர்” என்றார்.