அதிமுக பொதுக்குழுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!!

 
tn

அதிமுகவின் தலைமை பதவியை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமி , ஓ. பன்னீர்செல்வம் இடையே பெரும் போட்டி நிலவிய நிலையில்,  கடந்த ஆண்டு ஜூலை11ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ .பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அத்துடன் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

admk

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தார். இருப்பினும் அதிமுக பொதுக்குழு மற்றும் கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நின்ற நிலையில் , ஓ.பன்னீர் செல்வத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக  எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

ep

இதனிடையே பொதுச்செயலாளர் பதவி உட்பட அதிமுகவின் சட்ட விதிகள் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் திருத்தப்பட்ட நிலையில் , இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

election commision

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு மற்றும் பொது குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் செல்லும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதன்படி அதிமுகவில் திருத்தப்பட்ட சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. மாநிலக் கட்சி அங்கீகாரம் தொடர்பான கடிதத்தையும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு அனுப்பியுள்ளது.