இடைத்தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை

 
election

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் நாளன்று வாக்குப்பதிவுகள் நிர்ணயித்த நேரத்தை கடந்து அரை மணி நேரத்தை தொடரலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

2026 தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக, தவெக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளன. கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவருமே தற்போது தவெக சார்பில் இடைத்தேர்தலில் களமிறங்குவது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. திமுக மதுராந்தகத்தில் பரந்தாமனையும், தாராபுரத்தில் சுகன்யாவையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.  ஒருபுறம் தவெக தனது முதல் இடைத்தேர்தல் வெற்றியை பதிவு செய்ய தீவிரமாக களமிறங்கியுள்ளது. மறுபுறம் அதிமுக மற்றும் திமுக தனது பாரம்பரிய வாக்கு வங்கியையும், இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கையும் நம்பியுள்ளது. 

இந்நிலையில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் நாளன்று வாக்குப்பதிவுகள் நிர்ணயித்த நேரத்தை கடந்து அரை மணி நேரத்தை தொடரலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.