“இதுவரை 1.262 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்”- அர்ச்சனா பட்நாயக்

 
அர்ச்சனா

தமிழ்நாட்டில் சுமார் 14.59 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், “தமிழகம் முழுவதும் மொத்தம் 234 தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் 2.77 கோடி ஆண் வாக்காளர்கள், 2.89 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். 5,949 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை. தேர்தல் பணியில் 3 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 75,064 வாக்குச்சாவடிகளில்5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. 62 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும். தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.தமிழ்நாட்டில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 5.13 கோடி பேரில், சுமார் 14.59 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்கள். சுமார் 86ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 300 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 1.262 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரொக்கமாக மட்டும் ரூ.543 கோடி கைபற்றப்பட்டுள்ளது” என்றார்.