ஏப்ரல் முதல் 22 மாநிலங்களில் S.I.R பணி - தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
Feb 21, 2026, 06:10 IST1771634426000
சட்டப்பேரவை தேர்தலுக்காக பீகாரில் முதல் முறையாக S.I.R பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. தமிழகம், கேரளா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அடுத்தகட்டமாக 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான பணிகள், ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் S.I.R பணி நடைபெறவுள்ளது. அதற்கான தயாரிப்பு பணிகளை நிறைவு செய்யுமாறு அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

