விக்கிரவாண்டி உள்ளிட்ட 7 தொகுதிகளில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

 
1

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். இதனை அடுத்து அந்த தொகுதியில் இதுவரை இடைத்தேர்தல் நடைபெறவில்லை.

ஒரு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டால் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி விக்கிரவாண்டி உள்ளிட்ட 7 தொகுதிகளில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மேலும் இதுபோல் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளான பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு,மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடத்தப்படுவதாகவும், வாக்கு எண்ணிக்கையானது ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் இந்த மாதம் ஜூன் 21 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.