7 கட்டங்களாக நடைபெறுகிறது மக்களவை தேர்தல் - தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு

 
rajiv kumar

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். 
 
மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். நடப்பு மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர். 

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகம். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம். 100 வயதுக்கு மேல் நாட்டில் 1.02 லட்சம் வாக்களர்கள் உள்ளனர். ஏப்ரல் 01ம் தேதி 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க் தகுதி. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காகித தாள்கள் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும் என கூறினார். குற்றப்பிண்ணனி வேட்பாளர்களை அடையாளம் கான இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துள்ளது.