#BREAKING தமிழக தேர்தலில் புது வரலாறை நோக்கி... 70.00% வாக்குகள் பதிவு

 
Vote

தமிழக சட்டமன்றத் தேர்தலில்  மதியம் 3 மணி நிலவரப்படி 70.00% வாக்குகள் பதிவாகி உள்ளது.

Imageதமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 37.56% ஓட்டுப்பதிவாகி இருந்தது. பிறகு மதியம் 1 மணி நிலவரப்படி, ஓட்டுப்பதிவு 56.81 சதவீதமாக அதிகரித்தது.இந்த ஓட்டுப்பதிவு சதவீதம் மதியம் 3 மணிக்கு 70 சதவீதமாக உயர்ந்தது.. இதுவரை 3,25,79,329 வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர்.

அதிகபட்சமாக நாமக்கல் - 76.43%, கரூர் - 76.08%, சேலம் - 75.79 %, ஈரோடு - 75.61 %, திருப்பூர் - 75.38 % வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 61.95%  வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2021 தமிழக தேர்தலில் இதே 3 மணிக்கு 53.35% வாக்குகள் பதிவாகி இருந்தது. விழுப்புரம் 71.65%, நெல்லை 62.84%, திருவள்ளூர் 68.07%, நீலகிரி 63.67%, செங்கல்பட்டு 69.46%, சென்னையில் 68.13% சதவீத வாக்குள் பதிவாகியுள்ளன.