#ELECTION BREAKING : இந்த 3 அமைச்சர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை..!

 
1

திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டார்.. இந்த சூழலில் தான், அப்பட்டியலில் தற்போது அமைச்சர்களாக உள்ள 3 பேருக்கு சீட் வழங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.


பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அவர் எம்எல்ஏவாக உள்ள பத்மநாபபுரம் தொகுதி திமுக கூட்டணி கட்சியான சிபிஎம்-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த 2006 முதல் திமுக வசம் உள்ள இந்த தொகுதி தற்போது சிபிஎம்-க்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மனோ தங்கராஜின் வாய்ப்பு பறிபோயுள்ளது.ஏற்கனவே அவர் மீது பல்வேறு விமர்சனங்கள், புகார்கள் எழுந்துவந்த நிலையில், திமுக தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்ந்து, தாராபுரம் தொகுதி கயல்விழி செல்வராஜுக்கும், ராணிப்பேட்டை தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான ஆர்.காந்திக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. 

அதே சமயத்தில் அமைச்சர் காந்திக்கு பதிலாக அவரது மகன் வினோத் காந்திக்கு ராணிப்பேட்டை தொகுதி அளிக்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.