பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு

 
bjp

பாஜக மாநில தலைவர் பதவிக்கு நாளை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

Image

பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் F பூர்த்தி செய்து நாளை மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பாஜக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கும் நாளை விருப்ப மனு தாக்கல் செய்யலாம்

பாஜக மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும், குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் இருக்க வேண்டும்.