சதுரகிரி மலையேறிய முதியவர் மூச்சுத் திணறி பலி
சதுரகிரி மலையேறிய முதியவர் மூச்சுத் திணறி பலிசதுரகிரி மலையேறிய முதியவர் மூச்சுத் திணறி பலிஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையேறிய முதியவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(62). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். ராஜா தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார்.ராஜா சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் 38 பேருடன் குழுவாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். இந்த நிலையில் காலை தாணிப்பாறை அடிவாரம் வழியாக சதுரகிரி மலையேறி சென்றனர். கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் இரட்டை லிங்கம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு, உயிரிழந்தார்.இந்த நிலையில் இறந்த ராஜா உடலை டோலி மூலமாக அடிவாரம் கொண்டு வந்தனர். பின்னர் உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


