வலுவடையும் எல் நினோ! தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்?

 
ச்

எல்-நினோ ஆண்டு இறுதி வரை மேலும் வலுவடைந்து, 2027 தொடக்கத்திலும் தொடர வாய்ப்புள்ளதாக காலநிலை மாதிரிகள் கணித்துள்ளன.

தற்போது பசிபிக் பெருங்கடலில் வலுவான எல்-நினோ நிலை நிலவி வருகிறது. கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியைவிட பநிலை கணிசமாக அதிகமாக உள்ளது. எல்-நினோ ஆண்டு இறுதி வரை மேலும் வலுவடைந்து, 2027 தொடக்கத்திலும் தொடர வாய்ப்புள்ளதாக காலநிலை மாதிரிகள் கணித்துள்ளன. இந்தியப் பெருங்கடல் இருமுனை நிலை (IOD) தற்போது நடுநிலையில் உள்ளது. வடகிழக்குப் பருவமழைக் காலத்திலும் இந்த நிலை தொடர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எல்-நினோ மற்றும் IOD உள்ளிட்ட காலநிலை காரணிகள் வடகிழக்குப் பருவமழையின் தன்மையில் தாக்கம் செலுத்தும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


அக்டோபர்-டிசம்பர் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 5 வானிலை துணைப்பிரிவுகளில் மழை இயல்பாக இருக்கும். மழைப்பொழிவு நீண்டகால சராசரியின் 88-112% அளவில் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளத்தின் தென்பகுதிகளில் இயல்பானது முதல் இயல்பைவிட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அக்டோபரில் தமிழக தென் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் இயல்பானது முதல் அதிகமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.