முட்டை விலை திடீரென சரிவு

 
முட்டை விலை திடீரென சரிவு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.40-ல் இருந்து 20 காசுகள் குறைந்து ரூ.5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.40 ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 20 காசுகள் குறைந்து ரூ.5.20 ஆக முட்டை விலை நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வடமாநிலங்களில் சவான் மாதம் கடைபிடிக்கப்படுவதால் முட்டையின் நுகர்வு குறைந்தது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை சரிந்து கடந்த 2 வாரங்களாக ரூ.5.40ஆக நீடித்தது.