முட்டை விலை 5 காசுகள் உயர்வு..!!

 
Q Q
நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக அதிகரித்து உள்ளது.
கறிக்கோழி கிலோ ரூ.133-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.72-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.