கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை விலை 50 காசுகள் உயர்வு

 
egg

முட்டை கொள்முதல் விலை மேலும் 10 காசுகள் உயர்ந்து ரூ.6.20ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

நாமக்கல் மண்டலத்தில் 7 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழகத்தில் சத்துணவு திட்டம் தவிர வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. 

இந்நிலையில் நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 10 காசு உயர்ந்து ரூ.6.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை தேவை அதிகரித்து வருவதால் 3 நாட்களில் 50 காசுகள் கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.