நாமக்கலில் தொடர்ந்து குறையும் முட்டை விலை

 
tn

தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.

eggs

மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தினசரி 30 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. தமிழக  அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது 

egg

இந்நிலையில் நாமக்கலில் முட்டை விலை 3 நாட்களில் 60 காசுகள் சரிந்துள்ளது.  உற்பத்தி அதிகரித்து தேவை குறைந்ததால் விலை குறைந்துள்ளது.  தற்போது முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.20 காசாக சரிந்துள்ள நிலையில் சென்னையில் முட்டை மொத்த விலை ரூ.6.00ஆக உள்ளது. பிற மண்டலங்களிலும் முட்டை விலை குறைந்து வருகிறது.