8 நாட்களுக்குப் பின் உயர்ந்தது முட்டை விலை:. ஒரு முட்டை ரூ. 7.50 வரை விற்க வாய்ப்பு..!!
Oct 30, 2026, 18:33 IST1793365389994
நாமக்கல் மண்டலத்தில் 7 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழகத்தில் சத்துணவு திட்டம் தவிர வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் பண்ணையாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு, 8 நாட்களுக்கு பிறகு இன்று விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 5.90-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவேசில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ.7-க்கு விற்கப்படும் நிலையில், இனி ரூ.7.50 வரை உயர வாய்ப்புள்ளதால் மக்களின் முட்டை நுகர்வு குறையக்கூடும்

