தொடர்ந்து உயரும் முட்டை விலை! இன்றைய விலை நிலவரம்

 
கோழி பண்ணையாளர்களுக்கு ரூ.560 கோடி வருவாய் இழப்பு.. ரேஷன் கடைகளில் முட்டை விற்பனையா?!

கடந்த மூன்று நாட்களில் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்துள்ளது.

For the first time in 50 years: Egg prices hit a new high...! | 50  ஆண்டுகளில் இதுவே முதல் முறை: புதிய உச்சத்தை தொட்ட முட்டை விலை...!

முட்டை ஒன்றின்  பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.15 காசுகளில்  இருந்து 5  காசுகள் குறைத்து ரூ. 5.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று (23-1-2024) மாலை அறிவித்துள்ளது. இந்த விலை நாளை (24-1-2024) காலை முதல் அமலுக்கு வருகிறது. கடந்த 3 நாட்களில் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


முட்டையின் நுகர்வும் , விற்பனையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. இதுவே விலை விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் பண்ணையாளர்கள். தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தினசரி 30 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. தமிழக  அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.