தீபாவளி பண்டிகை எதிரொலி- முட்டை விலை அதிரடி உயர்வு

 
egg

முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

egg price

முட்டை ஒன்றின்  பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.45ல் இருந்து  5 காசுகள் உயர்த்தி ரூ. 5.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று (9-11-2023) மாலை அறிவித்துள்ளது. இந்த விலை நாளை (10-11-2023) காலை முதல் அமலுக்கு வருகிறது. முட்டையின் நுகர்வும் , விற்பனையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் பண்ணையாளர்கள். 

கடந்த 5 நாட்களில் முட்டை விலை 25 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக  அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.