#JUSTIN முட்டை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!

 
egg

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முட்டை ஒன்றின்  பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.6  ல்  இருந்து 10 காசுகள் உயர்த்தி ரூ. 6.10 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று மாலை அறிவித்துள்ளது. இந்த விலை நாளை காலை முதல் அமலுக்கு வருகிறது. முட்டையின் நுகர்வும் , விற்பனையும் அதிகரித்துள்ளது பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது.  சென்னையில் முட்டையின் விலை ரூ.6.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அரிவித்துள்ளது. முட்டை விலை கடந்த ஒரு வாரத்தில் 40 காசுகள் உயர்ந்தது குறிப்பிடதக்கது.