கோயிலுக்குள் முட்டை கலந்த கேக், சிக்கன் சுக்கா? பிறந்தநாள் ட்ரீட் என்ற பெயரில் அட்டகாசம்
Jun 15, 2026, 19:20 IST1781531438757
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்குள் அறநிலையத்துறை நிர்வாகி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முட்டை கலந்த கேக் வெட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் அறநிலையத்துறை நிர்வாகி சேதுப்பிரியாவுக்கு கோயில் இணை ஆணையர் முன்னிலையில் பிறந்தநாளுக்கு கேக் வெட்டப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முட்டை கலந்த கேக் வெட்டப்பட்டதாகவும் புகார் எழுந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிறந்தநாள் ட்ரீட்டுக்காக கோயில் பெயரில் சிக்கன் சுக்கா உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை சேதுப்பிரியா ஆர்டர் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அசைவ உணவை ஆர்டர் செய்திருந்தால் கோவிலுக்குள்தான் சாப்பிட்டிருக்கக் கூடும் என எழும் சந்தேகத்தால் பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

