‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்திற்கான நிதி நிறுத்தி வைப்பு - மத்திய அரசுக்கு கல்வியாளர்கள் கண்டனம்..

 
‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்திற்கான நிதி நிறுத்தி வைப்பு -  மத்திய அரசுக்கு கல்வியாளர்கள் கண்டனம்.. 

 ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடி தொகையை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. 

நாடு முழுவதும் தரமான கல்வி, டிஜிட்டல் கல்வி, பள்ளி கட்டமைப்பை வலுப்படுத்துதல், பெண் கல்வி, திறன்மேம்பாடு, விளையாட்டு, கல்வியில் சமநிலை  என பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டிற்கு 2024 - 2025 ஆம்  கல்வி ஆண்டுக்காக ரூ.3,586 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டுத் தொகையில் 60 சதவிகிதத்தை,  அதாவது ரூ.2,152 கோடியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். மீதமுள்ள ரூ.1.434 கோடி தமிழ்நாடு அரசு பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ஒன்றிய அரசு நான்கு தவணைகளாக நிதியை வழங்க வேண்டிய நிலையில், தற்போது வரை நடப்பாண்டுக்கான முதல் தவணை நிதி வழங்கப்படவில்லை.  

‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்திற்கான நிதி நிறுத்தி வைப்பு -  மத்திய அரசுக்கு கல்வியாளர்கள் கண்டனம்.. 

முதல் தவணைத் தொகையை ஜூன் மாதமே ஒன்றிய அரசு விடுவித்திருக்க வேண்டும்.  ஆனால் மத்திய அரசின் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்ததால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கான முதல் தவணையான ரூ.573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.  தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும்கூட இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் 15 ஆயிரம் ஆசிரியர்கள் அடுத்த மாதம் ஊதியம் பெறுவதில் கூட சிக்கலுக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்களிப்பு இல்லாமல் சமக்ர சிக்சா அபியான் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு அரசுக்கு  நிதிச் சுமை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.   மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, கற்றல் கற்பித்தல் போன்றவற்றை ஏற்றால்தான் சமக்ர சிக்ஷா அபியான் திட்ட  நிதி வழங்கப்படும் என  மத்திய அரசு கூறுவது கூட்டாட்சி தத்துவத்திற்கும் அரசியலமைப்புக்கு எதிரானது என கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.