அற்பர் கூட்டம் பதட்டத்தில் தன் கீழ்த்தரத்தை வெளிக்காட்டுகிறது - கனிமொழி விமர்சனம்!!

 
Kanimozhi

“அற்பர் கூட்டம், பதட்டத்தில் தன் கீழ்த்தரத்தை வெளிக்காட்டுகிறது” என்று  கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.

tn

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு  வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த சூழலில் பிரபல நாளிதழான தினமலரில் காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் எல்லோருக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது.வீட்டில் சாப்பிட்டு வரும் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும் அங்கும் சாப்பிடுகின்றனர். இதனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் இயற்கை உபாதைக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.