நவ.26, 27ல் கல்வி விருது விழா!

 
விஜய் கல்வி விருது

சென்னை நீலாங்கரையில் வரும் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் தவெக சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. 

த.வெ.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாவட்ட, சட்டசபை தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முதல் கட்ட கல்வி உதவித்தொகை மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 2 வாரங்களுக்கு முன் நடந்தது.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் வரும் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் தவெக சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.  ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு முதல்வர் விஜய் விருது வழங்கி கவுரவிக்கவுள்ளார்.