கல்வி விருது விழா - செல்போனுக்கு தடை!!

 
gg

தமிழக வெற்றிக்  கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழா, இன்று  மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில்  இரண்டு கட்டங்களாக சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது.  முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய  மாவட்டங்களில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று   நடைபெறுகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட  மீதமுள்ள மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஜூலை மூன்றாம் தேதி கல்வி விருதுகள் விழா நடைபெறுகிறது.

vijay

இதில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு ஒன்றாக அழைத்து ஊக்கத்தொகை மற்றும் வெற்றி சான்றிதழ் வழங்கி கௌரவிக்க உள்ளார்.

vijay

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் ‘கல்வி விருது' வழங்கும் விழாவில் செல்போன், பேனா, நோட்பேட் கொண்டு செல்ல அனுமதி இல்லை.  மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து இவற்றை பெற்றுக்கொண்டு டோக்கன் வழங்கப்படுகிறது. விழா முடிந்த பிறகு பொருட்களை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.