அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை- ஈபிஎஸ் உறுதி

 
EPS

அதிமுகவில் எந்த காலத்திலும் இனி இணைப்பு என்பதே கிடையாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

eps

சென்னை அம்பத்தூர் முகப்பேர் அருகே பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பா பெஞ்சமின் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சியில் தினந்தோறும் பத்திரிகைகளில் பாலியல் கொடுமைகள் அரங்கேறும் செய்திகள் தான் வருகின்றன. அதிமுக ஆட்சியில் ஒரு வருடத்திற்கு 9 பாலியல் வன்கொடுமைகள் தான் நடந்தன. ஆனால் திமுக ஆட்சியில் 20 நாட்களில் 8 பாலியல் வன்கொடுமைகள் நடந்து விட்டன.  தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பொம்மை முதல்வர் ஆட்சி செய்வதால் மக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியில் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படாததால் படுகொலைகள் அதிகரித்துள்ளன. அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை" என கடுமையாக விமர்சித்தார்.