அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி! மீண்டும் கூட்டணியா?

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ஈபிஎஸ் உடன் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தனர். டெல்லியில் முக்கியமானவர்கள் யாரையும் சந்திக்க வரவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில் அமித்ஷாவுடன் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில், அமித்ஷா உடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அண்மையில் எடப்பாடி பழனிசாமி, கொள்கை வேறு, கூட்டணி வேறு என பேட்டியளித்தார் என்பது குறிப்பிடதக்கது.