டிச.28 முதல் ஈபிஎஸ் மீண்டும் சுற்றுப்பயணம்
அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் டிசம்பர் 28 முதல் மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். இதுவரை கிட்டதட்ட 120 தொகுதிகளுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக சாடி பிரச்சாரம் செய்துவருகிறார். குறிப்பாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பணவீக்கம், ஊழல், வாரிசு அரசியல் மற்றும் தொழில் தேக்கம் போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி வருகிறாார். தனது அடுத்த கட்ட பிரச்சாரத்தில் மக்களின் வாழ்கை நிலைமைகள், அடிப்படை வசதிகள் மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவை குறித்து எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டக் கூடும் என்று தெரிகிறது. கூடவே திமுக அரசை சாடுவதையும் அவர் தொடரக் கூடும்.
அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் டிசம்பர் 28 முதல் மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். டிசம்பர் 30 ஆம் தேதிவரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். டிசம்பர் 28 ஆம் தேதி திருத்தணி, திருவள்ளூர் தொகுதிகளில் ஈபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 29 ஆம் தேதி திருப்போரூரிலும் ஈபிஎஸ் சுற்றுப்பயணம் செல்லவுள்ளார். மேலும் டிசம்பர் 30 ஆம் தேதி கும்மிடிப்பூண்டியிலும் ஈபிஎஸ் பிரச்சாரம் செய்யவுள்ளார்.


