கூட்டணி தொடர்பாக யாரும் பொது வெளியில் பேசக் கூடாது- ஈபிஎஸ்

கூட்டணி தொடர்பாக யாரும் பொது வெளியில் பேசக் கூடாது, உட்கட்சி விவகாரங்களை பொது மேடையில் பேசக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
82 மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனையில் காணொலி காட்சி மூலம் அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ள பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற கடுமையாக உழையுங்கள். கூட்டணி குறித்த முடிவை தலைமை எடுக்கும், உங்கள் பணிகளை சிறப்பாக செய்யுங்கள். நாம் யாருடன் கூட்டணி வைப்போம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. தனிப்பட்ட பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக்கூடாது. கூட்டணி விவகாரம் குறித்து யாருடனும் விவாதிக்கக்கூடாது.
பூத் கமிட்டியை விரைவாக அமைத்து பட்டியலை தலைமைக்கு அனுப்புங்கள். அதிமுகவின் கொள்கைகலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும். காலியாக உள்ள பதவிகளில் உடனடியாக நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும். கூட்டணி தொடர்பாக யாரும் பொது வெளியில் பேசக் கூடாது. உட்கட்சி விவகாரங்களை பொது மேடையில் பேசக் கூடாது” எனக் கூறினார்.