கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க வேண்டும் - ஈபிஎஸ் வலியுறுத்தல்

 
eps

மஞ்சள் அழுகல் நோய் போன்றவற்றால் நஷ்டமடைந்துள்ள கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மஞ்சள் அழுகல் நோய் போன்றவற்றால் கரும்பு விவசாயிகள் பெரிதும் நஷ்டமடைந்துள்ளனர். கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மஞ்சள் அழுகல் நோய் போன்றவற்றால் நஷ்டமடைந்துள்ள கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
 
பாதிக்கப்பட்ட விவசாயிகளை வேளாண் துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து, கரும்பு பாதிப்பு குறித்து கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதேபோல் கரும்புகளை காட்டுப்பன்றி தாக்குதலில் இருந்து காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு தேவையான பூச்சி மருந்துகளை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.