தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை!

 
eps

தந்தை பெரியாரின் 145வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 145வது பிறந்த நாளையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் சேலம் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  
முன்னதாக எடப்பாடி பழனிசாமி பெரியாரின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தனது எக்ஸ் வலைதளத்தில் புகழாரம் சூட்டியிருந்தார். அந்த பதிவில்,  சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும், பெண் அடிமைத்தனத்தை ஒழிக்கவும், சாதிய பாகுபாடுகளை அழிக்கவும், மூடநம்பிக்கைக்கு  எதிராகவும், பெண் கல்வியை முன்னெடுத்தும் போராடிய புரட்சியாளர், சமூக நீதிக் காவலர், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழையும் சுயமரியாதை கொள்கைகளையும் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.