எட்டப்பர்களின் முகத்திரை கிழிந்துள்ளது - தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பேச்சு

 
EPS

உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் திமுகவின் பி டீமாக இருந்து செயல்பட்ட எட்டப்பன்களின் முகத்திரை கிழிக்கப்பட்டிருகிறது என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க. பொதுக்குழு  வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதேபோல் அதிமுகவி இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

supreme court

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கூறியதாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கலங்கி போயிருந்தேன். அச்சத்துடன் இருந்தேன். தீர்ப்பு எவ்வாறு வரும் என எண்ணி தூங்காமல் இருந்தேன். ஜெயலலிதாவின் கோவிலில் வழிபட்டவுடன் அற்புதமான செய்தி வந்து சேர்ந்தது.  திமுகவின் பி டீமாக இருந்து செயல்பட்ட எட்டப்பன்களின் முகத்திரை கிழிக்கப்பட்டிருகிறது. அதிமுக இரண்டாக உடைந்தது என்ற கருத்துக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு முடிவு கட்டியுள்ளது.