கச்சத்தீவு பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை - எடப்பாடி பழனிசாமி!

 
EPS

கச்சத்தீவு பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். 
 
கச்சத்தீவை மீட்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில், கச்சத்தீவை மீட்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு 54 கடிதங்கள் எழுதியுள்ளேன். 10 வருடம் ஆட்சியில் இருந்தீர்களே என்ன செய்தீர்கள்? அண்மையில் டெல்லி சென்றீர்களே, கச்சத்தீவை மீட்க வலியுறுத்தினீர்களா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பினார். 

இந்த நிலையில், கச்சத்தீவு பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: கச்சத்தீவு பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை. கச்சத்தீவை தாரை வார்த்த நாள் முதல் மீனவர்கள் சோதனைக்கு உள்ளாகி வருகிறார்கள். கச்சத்தீவு தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக ஏன் தீர்மானம் கொண்டு வரவில்லை என கேள்வி எழுப்பினார்.