எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்தது இல்லை - ஈபிஎஸ் பேட்டி

 
eps

எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததாக சரித்திரம் கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தினத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி கொண்டாடினார். இதனை தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், கூட்டணிக்காக கட்சிகள் தவமாய் தவம் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடக்கிறது என்று அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல; அதிமுகவை குறிப்பிட்டு அண்ணாமலை கூறினாரா?

6 மாதங்களுக்கு பிறகுதான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறினார்.  “அதிமுக மீண்டும் அரியணை ஏறும்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்; அதிமுக ஆட்சியில் தமிழகம் என்றும் பெண்களை முன்னிலைப்படுத்தும் மாநிலமாக இருந்தது; தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பெண்களுக்காக வழங்கப்பட்டன என கூறினார்.