ஜீரோவும், ஜீரோவும் சேர்ந்தால் ஜீரோ தான்....ஓபிஎஸ்-டிடிவி தினகரனை கலாய்த்த எடப்பாடி பழனிசாமி

 
EPS

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணைந்தது மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்த கதை தான் என அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்கு பின் கடந்த நான்கு ஆண்டுகளாக இரட்டை தலைமையாக அதிமுக இயங்கி வந்தது. சமீபத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருக்குமான மோதல் இந்திய தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என வலுத்து வருகிறது. இதனிடையே சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட போவதாக ஓ.பன்னீசெல்வம் கூறிவருகிறார், இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம். இதனை தொடர்ந்து இருவரும் இணைந்து செயல்பட போவதாக அறிவித்தனர். 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணைந்தது குறித்து பேசினார். அவர் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணைந்தது மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல. ஜீரோவும், ஜீரோவும் சேர்ந்தால் ஜீரோ வருவது போல், டிடிவி தினகரனும், ஓ.பனீர்செல்வமும் இணைந்தது உள்ளது. டிடிவி தினகரன் நடத்தி வரும் அமமுக கட்சி காலியாகி வருகிறது. டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது காலியான கூடாரத்தில் ஒட்டகம் சேர்ந்ததை போன்ற நிலை தான். பண்ருட்டி ராமசந்திரன் எந்த கட்சிக்கும் விஸ்வாசமாக இருந்ததில்லை. ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எங்கே? சபரீசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது அவர் திமுகவின் பி டீம் என்பதை உறுதிபடுத்தியுள்ளது.