கிப்லி ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடி பழனிசாமி

 
eps

தமிழக எதிர்க்கட்சி தலைவ்ரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கிப்லி ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளார். 

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கிப்லி புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.  OpenAI இன் ChatGPT 4o உதவியுடன் தங்களது புகைப்படங்களை கிப்லி புகைப்படங்களாக மாற்றி அதனை சமூக வலைதளங்களி பதிவிட்டு வருகின்றனர். அதாவது வாட்ஸ் ஆப், வேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிப்லி புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். 


இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவ்ரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கிப்லி ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் இதயத்திலிருந்து ஸ்டுடியோகிப்லி உலகம் வரை — எனது மிகவும் மறக்கமுடியாத சில தருணங்களை காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.